2024 மக்களை தேர்தல்: பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றவாது அணி அமைக்கும் திட்டத்தில் கெஜ்ரிவால்...!


2024 மக்களை தேர்தல்: பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றவாது அணி அமைக்கும் திட்டத்தில் கெஜ்ரிவால்...!
x

மூன்றவாது அணி அமைக்கும் திட்டத்தில் கெஜ்ரிவால் 7 மாநில முதல்-மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

2024 மக்களவை தேர்தலை எதிர்நோக்கி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றவாது அணி அமைக்கும் திட்டத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக 7 மாநில முதல்-மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வலுவான கூட்டணி குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ,பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணிக்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மூன்றாவது அணியை நோக்கிச் செல்வதற்கான புதிய முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.


Next Story