ஜார்க்கண்ட்: தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது மோதிய ரெயில் - 2 பேர் பலி


ஜார்க்கண்ட்: தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது மோதிய ரெயில் - 2 பேர் பலி
x

ஜார்க்கண்ட்டில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள் மீது ரெயில் மோதிய சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டம் வித்யாசாகரில் இருந்து கசிடர் பகுதிக்கு நேற்று இரவு 7 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எக்ஸ்பிரஸ் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து சிலர் இழுத்துள்ளனர். இதனால், ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, ரெயிலில் இருந்து சில பயணிகள் இறங்கி அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் நடதுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் புறநகர் ரெயில் வேகமாக வந்துள்ளது. இதை கவனிக்காத 2 பேர் தண்டவாளத்தில் தொடர்ந்து நடந்து சென்றுள்ளனர். இதில், வேகமாக வந்த ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் மேலும் சிலர் தண்டவாளத்தில் நடந்து சென்றதால் அவர்கள் மீதும் ரெயில் மோதியதா? என்பது குறித்தும் விபத்து நடந்த பகுதியில் தேடுதல் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story