காஷ்மீர்: வங்கி அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை


காஷ்மீர்: வங்கி அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
x

காஷ்மீரில் வங்கி அதிகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி உள்பட 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குல்காம் மாவட்டத்தில் வங்கிக்குள் கடந்த 2-ம் தேதி நுழைந்த பயங்கரவாதி அங்கு பணியில் இருந்த மேலாளர் விஜய்குமாரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றான். உயிரிழந்த விஜய்குமார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவராவார்.

இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கஞ்சி உலர் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாகிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் சோபியான் மாவட்டத்தை சேர்ந்த ஜன் முகமது லோன் மற்றும் துஃபெயில் நசீர் கனி என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஜன் முகமது லோன் என்ற பயங்கரவாதி தான் கடந்த 2-ம் தேதி வங்கி மேலாளர் விஜய்குமாரை சுட்டுக்கொன்றதாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி தெரிவித்துள்ளார்.


Next Story