தானேயில் உத்தவ் கட்சி பெண் நிர்வாகி மீது மைவீசி தாக்குதல்


தானேயில் உத்தவ் கட்சி பெண் நிர்வாகி மீது மைவீசி தாக்குதல்
x

தானேயில் உத்தவ் தாக்கரே கட்சி பெண் நிர்வாகி மை வீசி தாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் நிர்வாகி மீது தாக்குதல்

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் சமூகவலைதள ஒருங்கிணைப்பாளர் அயோத்தியா போல். இவர் நேற்று முன்தினம் இரவு தானே மாவட்டம் கல்வாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அப்போது சில பெண்கள் அயோத்தியா போலின் முகத்தில் மை பூசினர். பின்னர் அவர்கள் தலை முடியை பிடித்து இழுத்து, அறைந்து தாக்கினர்.

அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் பெண் நிர்வாகியை அங்கு இருந்து அழைத்து சென்று காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வர்ஷா கெய்க்வாட் கண்டனம்

உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் நடத்தும் நிகழ்ச்சி என பொய் கூறி சிலர் திட்டமிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து தன்னை தாக்கி உள்ளதாக அயோத்தியா போல் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இந்தநிலையில் அயோத்தியா போல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட், மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே வலியுறுத்தி உள்ளனர்.


Next Story