உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் அமையவுள்ள யோகி ஆதித்யநாத் கோவில்..!!


உத்தர பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் அமையவுள்ள யோகி ஆதித்யநாத் கோவில்..!!
x

Image Courtesy: PTI/ANI 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளார்.

போபால்,

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பணியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அயோத்தி மாவட்டத்தில் அவருக்கு கோயில் கட்டியுள்ளார். சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ராமர் போன்ற வடிவத்திலேயே, வில் மற்றும் அம்புடன் யோகி ஆதித்யநாத் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த கோவில் குறித்த புகைப்படம் மற்றும் செய்திகள் கடந்த வாரம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுவாமி சத்யநாத் என்ற நபர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு மாநிலத்தில் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளார். மாநிலத்தில் உள்ள நிவாரி மாவட்டத்தின் தெஹர்கா கிராமத்தில் உ.பி முதல் மந்திரிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையில் கோயில் கட்டப்படும் என்று சத்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலின் சிறப்பம்சங்கள் பற்றி சத்யநாத் கூறுகையில், "யோகி ஆதித்யத்யானத்துக்கு அர்ப்பணிக்கப்படவுள்ள இந்த கோயில் 20 அடி அகலமும் 12 அடி உயரமும் இருக்கும். இந்த கோவிலில் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் வாழ்நாளில் செய்த பணிகள் கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த கோவில் ஒரு வருடத்தில் முழுமையாகக் கட்டப்பட்டு 2024 ஆம் ஆண்டு தீபாவளியன்று திறக்கப்படும். கோவில் திறப்பு விழாவிற்கு உ.பி முதல் மந்திரி ஆதித்யநாத் அழைக்கப்படுவார்" என்றார்.


Next Story