உ.பி.: அதிகாலையில் பயங்கர விபத்து; 6 பேர் உயிரிழந்த சோகம்
இவர்களுடைய கார், பைரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்தபோது, மற்றொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது.
பல்லியா,
உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, கார் ஒன்றில் சிலர் வந்து கொண்டிருந்தனர். அதிகாலை 3 முதல் 3.30 மணியளவில் பல்லியாவின் பைரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்தபோது, இவர்களுடைய கார், மற்றொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில், லாரி ஒன்றின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்திற்கான காரணம் பற்றிய தகவல் உடனடியாக தெரிய வரவில்லை என எஸ்.பி. ரஞ்சன் வர்மா கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story