வக்பு வாரிய சொத்து முறைகேடு அறிக்கை சட்டசபையில் தாக்கல்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு


வக்பு வாரிய சொத்து முறைகேடு அறிக்கை சட்டசபையில் தாக்கல்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் வக்பு வாரிய சொத்துகள் முறைகேடு குறித்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

அறிக்கை தாக்கல்

கர்நாடக சட்டசபையில் நேற்று வக்பு வாரிய சொத்துகள் முறைகேடு குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது, "கர்நாடகத்தில் வக்பு வாரிய சொத்துகள் என்பது அரசின் சொத்துகள். அந்த சொத்துகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அன்வர் மணிப்பாடி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை இந்த சபையில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, வக்பு வாரிய சொத்துகள் யார்-யார் பெயரில் இருக்கிறது என்பது தெரியும். யார்-யார் முறைகேடு செய்துள்ளனர் என்பதும் தெரியவரும்" என்றார்.

அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் யு.டி.காதர், அந்த அறிக்கையை தாக்கல் செய்யுங்கள். தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினர். கர்நாடக சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) 40 சதவீத கமிஷன் குறித்த விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அரசுக்கு எதிரான ஊழல் புகார்களை விரிவாக பேச திட்டமிட்டுள்ளார்.

காரசார விவாதம்

அதேபோல் காங்கிரசை இக்கட்டான நிலைக்கு தள்ள, அக்கட்சி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை பகிரங்கப்படுத்த பா.ஜனாவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் சபையில் இன்று பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே காரசாரமான விவாதம் நடைபெற உள்ளது.


Next Story