நாங்கள் தடுப்புகளை உடைத்துள்ளோம், ஆனால் சட்டத்தை மீற மாட்டோம்: ராகுல் காந்தி


நாங்கள் தடுப்புகளை உடைத்துள்ளோம், ஆனால் சட்டத்தை மீற மாட்டோம்: ராகுல் காந்தி
x

அசாமில் பாஜகவை தோற்கடித்து விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம் என்று ராகுல்காந்தி கூறினார்.

கவுகாத்தி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த 14-ந் தேதி மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். பெரும்பாலும் பஸ் மூலம் செல்லும் யாத்திரை மும்பை வரை நடக்கிறது. இந்தநிலையில் ராகுல்காந்தி அசாம் தலைநகர் கவுகாத்திக்குள் நுழைய முயன்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் தடுப்புகளை உடைத்து முழக்கங்களை எழுப்பினர். போலீசார் - காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதன் பின்னர் தனது கட்சி ஆதரவாளர்களிடம் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "நாங்கள் தடுப்புகளை உடைத்துள்ளோம். ஆனால் சட்டத்தை மீற மாட்டோம். நாங்கள் பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். காங்கிரஸ் தொண்டர்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். அசாமில் பாஜகவை தோற்கடித்து விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்போம்.

காவல்துறை அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டு உத்தரவுகளைப் பின்பற்றிச் செயல்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஊழல் மிகுந்த முதல் மந்திரிக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்." என்று அவர் கூறினார்.


Next Story