பெண் நிர்வாகி பாலியல் குற்றச்சாட்டு: இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசாம் போலீஸ் நிலையத்தில் ஆஜர்


பெண் நிர்வாகி பாலியல் குற்றச்சாட்டு: இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசாம் போலீஸ் நிலையத்தில் ஆஜர்
x

இந்த வழக்கில் சி.ஐ.டி. அதிகாரிகளும் சம்மன் அனுப்பிய நிலையில், அங்கும் அவர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

கவுகாத்தி,

இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் மீது மற்றொரு பெண் தலைவரான அங்கிதா தத்தா பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்தார். தற்போது அங்கிதா பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் அசாமின் திஸ்பூர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் சீனிவாசுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி நேற்று அவர் கவுகாத்தி பான் பஜாரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர் அங்குள்ள சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கும் சென்றார். இந்த வழக்கில் சி.ஐ.டி. அதிகாரிகளும் சம்மன் அனுப்பிய நிலையில், அங்கும் அவர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த விவகாரம் கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது. நீதித்துறை மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்' என்று மட்டும் கூறினார். போலீஸ் விசாரணைக்காக சென்ற சீனிவாசுடன் காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்களும் உடன் சென்றனர்.



Next Story