காஷ்மீர்: போக்குவரத்து தடைபட்டதால் ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்


காஷ்மீர்: போக்குவரத்து தடைபட்டதால் ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்
x

காஷ்மீரில் போக்குவரத்து தடைபட்டதால் பெண் ஒருவருக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் ரம்பான் மாவட்டம் கூல் என்ற ஊரைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஷகீனா. இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அழைத்துச்செல்லப்பட்டார். ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அந்த ஆம்புலன்ஸ் சென்றபோது, போக்குவரத்து தேங்கியதால் மேலே செல்ல முடியாமல் நின்றது.

இந்நிலையில் ராணுவத்தினர் அந்த ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தனர். ஆனால் மெகர் என்ற இடத்துக்கு அருகில் சென்றபோது, மலையில் இருந்து கற்கள் உருண்டுவிழுந்ததால் மீண்டும் ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது உச்ச பிரசவ வலியால் தவித்த அந்த கர்ப்பிணி, ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களின் உதவியுடன் குழந்தையை பெற்றெடுத்தார்.


Next Story