உத்தரபிரதேசத்தில் மழை, வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வுசெய்தார் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்


உத்தரபிரதேசத்தில் மழை, வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வுசெய்தார் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்
x

வெள்ளத்திற்கு முந்தைய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கோண்டா மாவட்டத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலி பர்சௌலி அணைக்கட்டு மற்றும் காக்ரா ஆற்றின் எல்ஜின் பாலம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்டத்தில் வெள்ளத்திற்கு முந்தைய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

மாவட்டத்தில் இந்த ஆண்டு இயல்பான மழை பெய்துள்ளது. இருப்பினும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காக்ரா மற்றும் ரப்தி ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெள்ளம் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story