மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு-தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை


மைனர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு-தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை
x

மைனர் பெண்ணை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது.

மங்களூரு:

பாலியல் தொல்லை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே புறநகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் பூஜாரி. தொழிலாளி. அதே பகுதியில் 17 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். சுதாகருக்கும், அந்த மைனர் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் செல்போன் எண்களை பரிமாறினர். சுதாகர் அந்த மைனர் பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் ெதால்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் மைனர் பெண்ணை கடந்த 2014-ம் ஆண்டு சுதாகர் மைசூருவுக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து அவர் அந்த பெண்ணை திருமணம் செய்தார். இதையடுத்து ்பாண்டவபுரா அருகே பெவினிகோப்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அப்போது சுதாகர் சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதற்கிடையே மகள் கடத்தப்பட்டதாக, சிறுமியின் பெற்றோர், மங்களூரு புறநகர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்கள் பெவினகோப்பு பகுதிக்கு சென்று வீட்டில் இருந்த சிறுமியை மீட்டனர்.

12 ஆண்டு சிறை

மேலும், சுதாகரை கைது செய்து கோர்ட்டில் அஜர்படுத்தினர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. அந்த வழக்கின் விசாரணை மாவட்ட கூடுதல் கோர்ட்டில் (போக்சோ) நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அப்போது அவர் சிறுமியை கடத்தி திருமணம் செய்து, அவருக்கு பாலியல் ெதால்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டதால், சிறுமியின் கணவரான சுதாகர் பூஜாரிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், சிறுமிக்கு உரிய நிவாரணத்தை வாலிபரிடம் வாங்கி, போலீசார், சிறுமியின் குடும்பத்தினரிடம் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story