பெங்களூருவில் வேலை செய்த வீடுகளில் திருடி வந்த மும்பை பெண்கள் 3 பேர் கைது


பெங்களூருவில் வேலை செய்த வீடுகளில் திருடி வந்த மும்பை பெண்கள் 3 பேர் கைது
x

பெங்களூருவில் வேலை செய்த வீடுகளில் திருடி வந்த மும்பை பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் அரவிந்த். இவரது வீட்டில் சமீபத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் வேலைக்கு சேர்ந்திருந்தார். வேலைக்கு சேர்ந்த 3-வது நாளிலேயே அரவிந்த் வீட்டில் இருந்த 250 கிராம் தங்க நகைகள், 100 கிராம் வெள்ளி நாணயங்களை சுப்புலட்சுமி திருடி சென்றிருந்தார். இதுகுறித்து ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புலட்சுமியை தேடிவந்தனர். இந்த நிலையில், ஹெண்ணூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வீடுகளில் திருடி வந்ததாக 3 பெண்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த பிரியங்கா ராஜேஸ்(வயது 29), மகாதேவி(26), நவி மும்பையை சேர்ந்த வனிதா(37) என்று தெரிந்தது.

இவர்கள் 3 பேருக்கும் முகநூலில் கணக்கு உள்ளது. அதில், தங்களது பெயர், விவரம் உள்ளிட்டவற்றை தவறாக கூறி, வீடுகளில் வேலை செய்ய பெண்கள் இருப்பதாக கூறி விளம்பரம் செய்வாா்கள். அந்த விளம்பரத்தை பார்த்து வேலைக்கு அழைத்ததால், தங்களது பெயர், ஊரை மாற்றிக்கூறி வேலைக்கு சேருவார்கள். பின்னர் ஓரிரு நாட்களிலேயே அந்த வீட்டில் இருக்கும் நகை, பணத்தை திருடி செல்வதை 3 பேரும் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.


Next Story