பெங்களூரு ஈத்கா மைதானத்தில் யோகா தினவிழா கொண்டாட அனுமதி மறுப்பு; மாநகராட்சி அதிரடி உத்தரவு


பெங்களூரு ஈத்கா மைதானத்தில் யோகா தினவிழா கொண்டாட அனுமதி மறுப்பு; மாநகராட்சி அதிரடி உத்தரவு
x

பெங்களூரு ஈத்கா மைதானத்தில் யோகா தினவிழா கொண்டாட மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு வக்பு போர்டு மற்றும் இந்து அமைப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஈத்கா மைதானம் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்களை போன்று இந்து அமைப்பினரும் சில நிகழ்ச்சிளை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில், நாளை உலக முழுவதும் யோகா தினவிழா அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஈத்கா மைதானத்தில் யோகா தினவிழா கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என்று சில இந்து அமைப்புகள், பெங்களூரு மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு இருந்தது. மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு கடிதமும் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஈத்கா மைதானத்தில் யோகா தினவிழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுத்து பெங்களூரு மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈத்கா மைதான விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, ஈத்கா மைதானம் வக்பு போர்டுவுக்கு சொந்தமானதா? அல்லது மாநகராட்சிக்கு சொந்தமானதா? என்பது இன்னும் இறுதி செய்யப்படாத காரணத்தாலும், அங்கு யோகா தினவிழா கொண்டாடுவதற்கு மாநகராட்சி அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்து அமைப்புகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story