தொழிற்படிப்புகளுக்கான பொதுநுழைவு தேர்வு; 2.16 லட்சம் பேர் எழுதுகிறார்கள்


தொழிற்படிப்புகளுக்கான பொதுநுழைவு தேர்வு; 2.16 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
x

கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

பெங்களூரு:

பொதுநுழைவு தேர்வு

கர்நாடகத்தில் என்ஜினீயரிங், கட்டிட கலை உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொதுநுழைவு தேர்வு (சி.இ.டி.) நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 486 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. 2 லட்சத்து 16 ஆயிரத்து 525 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 550 மாணவர்களும், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 975 மாணவிகள் அடங்குவர்.

இந்த பொது நுழைவு தேர்வு சனிக்கிழமை வரை நடக்கிறது. முதல் நாளான நாளை உயிரியல் மற்றும் கணித தேர்வும், வௌ்ளிக்கிழமை)இயற்பியல், வேதியியல் தேர்வும் நடக்கிறது. 18-ந் தேதி எல்லையோரம் வசிக்கும் மற்றும் வெளிமாநில கன்னட மாணவர்களுக்காக கன்னட தேர்வு நடக்கிறது. காலை நேர தேர்வு 10.20 மணிக்கு தொடங்கி 11.50 மணிக்கும், பிற்பகல் தேர்வு 2.20-க்கு தொடங்கி 3.50-க்கும் முடிவடைகிறது.

ஹிஜாப் அணிய தடை

தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதலை கர்நாடக தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு அறைக்குள் செல்போன், கைகடிகாரம் உள்பட மின் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் காதுகளை முழுமையாக மூடவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. ஹிஜாப் பற்றி வௌிப்படையாக குறிப்பிடாமல் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story