'தன் மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்த கடிதம் எழுத தயாரா?'; மந்திரி அஸ்வத் நாராயணுக்கு சித்தராமையா சவால்


தன் மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்த கடிதம் எழுத தயாரா?; மந்திரி அஸ்வத் நாராயணுக்கு சித்தராமையா சவால்
x

‘தன் மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்த கடிதம் எழுத தயாரா?’ என்று மந்திரி அஸ்வத் நாராயணுக்கு சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் பயப்பட மாட்டோம்

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கோரி முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதுவேன் என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன். அதே போல் தன் மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்த கோரி அவர் முதல்-மந்திரிக்கு கடிதம் எழுத வேண்டும்.

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்கள் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க இந்த 3 ஆண்டுகள் போதவில்லையா?. இந்த ஆட்சியில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் மீது தேவையின்றி மந்திரி அஸ்வத் நாராயண் புகார் கூறுகிறார். இந்த அரசின் முறைகேடுகளை நாங்கள் தொடர்ந்து பகிரங்கப்படுத்தி வருகிறோம். இதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு மிரட்டல் தந்திரத்தை பின்பற்றுகிறது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.

அனைவரும் ராஜினாமா

இந்த ஆட்சியில் நடந்த பெரிய முறைகேடுகளை விசாரிக்க ஒட்டுமொத்த விதான சவுதாவையே விசாரணை அமைப்புகளிடம் விட்டு கொடுக்க வேண்டி இருக்கும். மந்திரிகள் வேறு எந்த பணிகளையும் செய்யாமல் விசாரணை அமைப்புகள் முன்பு தினமும் ஆஜராக வேண்டி இருக்கும். இதை விட மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்வது நல்லது.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.


Next Story