கோடிஹள்ளி சந்திரசேகர், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்


கோடிஹள்ளி சந்திரசேகர், தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்
x

போராட்டத்தை வாபஸ் பெற ரூ.35 கோடி லஞ்சம் பெற்ற கோடிஹள்ளி சந்திரசேகர், தனது விவசாய சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோலார்:

ஊழியர்கள் போராட்டம்

கர்நாடக மாநில விவசாய சங்க பொது செயலாளர் அம்பனி சிவப்பா கோலாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில விவசாய சங்க தலைவராக இருப்பவர் கோடிஹள்ளி சந்திரசேகர். இவர் விவசாயிகள் தொடர்பான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமை தாங்கினார். அப்போது அவர் போராட்டத்தை வாபஸ் பெற ரூ.35 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், போராட்டத்தின் போது ஊழியர்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தவும் முயன்றுள்ளார்.

பதவி விலக வேண்டும்

இதேபோல் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க விவசாயிகளிடம் இருந்து மாதம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்று வந்துள்ளார். இதனால் கோடிஹள்ளி சந்திரசேகர் விவசாய சங்க தலைவர் பதவியில் இருக்க தகுதியில்லை. அவர் விவசாய சங்க தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story