சிவமொக்கா டவுன் பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது


சிவமொக்கா டவுன் பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது
x

சிவமொக்கா டவுன் பகுதியில் சகஜ நிலைக்கு திரும்பியதால் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட தொடங்கினர்.

சிவமொக்கா:

சிவமொக்கா டவுனில் கடந்த 15-ந் தேதி நடந்த சுதந்திர தின விழாவின்போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் சிவமொக்கா டவுன் பகுதி நேற்று சகஜ நிலைக்கு திரும்பியது.

அமீர் அகமது சதுக்கம், ஓ.டி.ரோடு, எம்.கே.கே. ரோடு, பைபாஸ் சாலை, திப்பு நகர் ஆகிய பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் கடைகள் அனைத்து திறக்கப்பட்டு இருந்தன. கடைகளை காலை 10 மணிக்கு திறந்து இரவு 8 மணிக்கு மூட போலீசார் அறிவுறுத்தியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story