உலகமயமாக்கலில் திறமைக்கு மட்டுமே மதிப்பு; உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு


உலகமயமாக்கலில் திறமைக்கு மட்டுமே மதிப்பு; உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயண் பேச்சு
x

உலகமயமாக்கலில் திறமைக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கிறது என்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கூறியுள்ளார்.

பெங்களூரு:

திறமைக்கு மட்டுமே மதிப்பு

பெங்களூரு கொம்மகட்டாவில் பத்மஸ்ரீ நிர்வாக மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

34 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த கல்வி கொள்கை மிக சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகமயமாக்கலில் எண்ணிக்கைக்கு மதிப்பு இல்லை. இங்கு திறமைக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கிறது. தற்போது வெளிப்படையான யுகமாக உள்ளது. தேசிய கல்வி கொள்கையில் அனைத்து தரப்பினரும் மேம்படும் வகையில் கல்வி முறை உருவாக்கப்பட்டுள்ளன.

முழுமையான கற்றல்

இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கொள்கையில் முழுமையான கற்றல், உடற்கல்வி, ஆரோக்கியம், சமூக நலன், வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு சமமான வாய்ப்பு, ஆராய்ச்சி, அறிவியல் மனப்பான்மை, தொழில்நுட்ப பயன்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தரமான கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.

மேலும் கற்பித்தலிலும் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். இதற்கு நேர்மையான பார்வை அவசியம். போட்டி, நிலைத்தன்மை, தார்மிகம், மாண்புகள் இவை அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.


Next Story