காஷிமிராவில் சிறுமிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட முயன்ற 2 பெண்கள் சிக்கினர்


காஷிமிராவில் சிறுமிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட முயன்ற 2 பெண்கள் சிக்கினர்
x

காஷிமிராவில் சிறுமிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட முயன்ற 2 பெண்கள் போலீசாரிடம் சிக்கினர்.

மாவட்ட செய்திகள்

தானே,

தானே மாவட்டம் மிராரோடு காஷிமிரா பகுதியில் சிறுமிகளை வைத்து விபசாரம் நடந்து வருவதாக மிராபயந்தர்- வசாய்விரார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சாலையோர போலி வாடிக்கையாளரை அனுப்பி வைத்தனர். அவர் அங்கு இருந்த ஒரு பெண்ணிடம் பேரம் பேசி ரூ.2 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டனர்.

இதைதொடர்ந்து அந்த பெண்ணின் கூட்டாளியான மற்றொரு பெண் விபசாரத்திற்காக சிறுமிகளை அழைத்து வந்தார். அப்போது போலீசார் விரைந்து சென்று 2 சிறுமிகளை மீட்டனர். 2 பெண்களையும் பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசார வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் சிறுமியின் அத்தை உறவு முறை கொண்டவர் என்பது தெரியவந்தது.


Next Story