தாராவியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 33 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைப்பு


தாராவியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 33 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 29 Jun 2023 7:30 PM GMT (Updated: 29 Jun 2023 7:30 PM GMT)

தாராவியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 33 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

தாராவியில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 33 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிலம் ஒப்படைப்பு

மும்பையில் கொலபா முதல் சீப்ஸ் வரை 33 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில்-3 திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில் தாராவி டி-ஜங்ஷன் பகுதியில் தாராவி மெட்ரோ ரெயில் நிலையம், துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் மெட்ரோ ரெயில் நிலைய பணிகளுக்காக டி-ஜங்ஷன் பகுதியில் உள்ள 33 ஆயிரம் சதுர அடி நிலம் அதிகாரப்பூர்வமாக மும்பை மெட்ரோ ரெயில் நிலைய கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மந்திரி சபை ஒப்புதல்

நிலத்தை ஒப்படைக்க மாநில மந்திாி சபை ஒப்புதல் அளித்து உள்ளது. இதுகுறித்து மும்பை மெட்ரோ ரெயில் கழக இயக்குனர் ரமணா கூறுகையில், " துணை மின் நிலையம் மற்றும் பல பணிகள் அந்த நிலத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே அந்த நிலம் எங்கள் கட்டுபாட்டில் தான் இருந்தது. நிலம் அதிகாரப்பூர்வமாக எங்களுக்கு கிடைக்க மந்திரி சபை ஒப்புதல் அவசியமாக இருந்தது. தற்போது மந்திரி சபை நிலத்தை ஒப்படைக்க ஒப்புதல் அளித்து உள்ளது " என்றார்.


Next Story