வீடு தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.1.55 கோடி மோசடி செய்த 6 பேர் மீது வழக்கு


வீடு தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.1.55 கோடி மோசடி செய்த 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Aug 2023 6:45 PM GMT (Updated: 15 Aug 2023 6:46 PM GMT)

வீடு தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.1.55 கோடி மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

மும்பை,

மும்பை சுன்னாப்பட்டியை சேர்ந்த வக்கீல் ஒருவர், சுதேசி மில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில் வீடு ஒன்று முன்பதிவு செய்தார். கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த ஜூலை மாதம் வரையில் வீட்டிற்கான பணத்தை செலுத்தி இருந்தார். ஆனால் வீடு அவருக்கு கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் முன்பதிவு செய்த வீட்டை கட்டுமான நிறுவனம் அவரின் அனுமதியின்றி அடமானம் வைத்ததாக தெரியவந்தது. இது பற்றி அறிந்த வக்கீல் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 6 ேபரிடம் விசாரணை நடத்தினர். இதில் வக்கீலிடம் வீடு தருவதாக கூறி ரூ.1 கோடியே 55 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story