சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
நவிமும்பை துர்பே பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறாள். சிறுமிக்கு 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் காமோதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அறிமுகம் ஆனார். சிறுமி வாலிபருடன் நட்பாக பழகி வந்தார். அதன் பிறகு வாலிபர் காதலிப்பதாக கூறி சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பலமுறை பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக கடந்த மே மாதம் சிறுமி கர்ப்பம் ஆனாள். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வாலிபர், அவருக்கு உடந்தையாக இருந்த தாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story