பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.4½ லட்சம் அபேஸ் - 3 பேர் மீது வழக்கு


பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.4½ லட்சம் அபேஸ் - 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Jun 2023 7:30 PM GMT (Updated: 30 Jun 2023 7:30 PM GMT)

தானே மாவட்டத்தை சேர்ந்த 33 வயது பெண்ணிடம் பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.4½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு

தானே,

தானே மாவட்டத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த மே மாதம் திருமண இணையதளத்தில் வரன் தேடுவதற்காக தனது சொந்த விவரங்களை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து அவரை தொடர்புகொண்ட ஒருவர் தான் இங்கிலாந்து நாட்டில் சிவில் என்ஜினீயராக இருப்பதாக அறிமுகப்படுத்தி கொண்டார். நாளடைவில் 2 பேரும் செல்போனில் பேசி கொண்டு வந்தனர். இந்தநிலையில் இங்கிலாந்து என்ஜினீயர் என கூறிய ஆசாமி தான் மும்பைக்கு வர இருப்பதாகவும், சில பரிசு பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். சில நாட்கள் கழித்து டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெண்ணுக்கு அழைப்பு வந்தது. இதில் பேசிய நபர் சுங்க அதிகாரி எனக்கூறிக்கொண்டு பரிசு பொருள் பார்சலுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், அதன்பின்னர் பார்சல் கூரியரில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய அப்பெண் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் அனுப்பி வைத்தார். ஆனால் பார்சல் எதுவும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது பற்றி அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் நடந்த விசாரணையில் இந்த மோசடியில் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.



Next Story