ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சி: 'ஆபரேஷன் தாமரை' ஜனநாயகத்திற்கு எவ்வளவு ஆபத்து என்பதை காட்டுகிறது- சிவசேனா குற்றச்சாட்டு


ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சி: ஆபரேஷன் தாமரை ஜனநாயகத்திற்கு எவ்வளவு ஆபத்து என்பதை காட்டுகிறது- சிவசேனா குற்றச்சாட்டு
x

ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சி ஆபரேஷன் தாமரை ஜனநாயகத்திற்கு எவ்வளவு ஆபத்து என்பதை காட்டுகிறது என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சி ஆபரேஷன் தாமரை ஜனநாயகத்திற்கு எவ்வளவு ஆபத்து என்பதை காட்டுகிறது என சிவசேனா கூறியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாகவும், 40 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.800 கோடி பேரம் பேசப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆபத்தானது

ஆபரேஷன் தாமரை ஜனநாயகத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பதை டெல்லியில் தற்போது நடக்கும் சம்பவம் காட்டுகிறது.

மத்திய விசாரணை அமைப்புகளின் சோதனையும், பழிவாங்கும் அரசியலும் பா.ஜனதாவின் மிகப்பெரிய ஆயுதமாகும்.

அமலாக்கத்துறையை பயன்படுத்தி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மத்திய விசாரணை அமைப்பின் இதுபோன்ற அழுத்தத்திற்கு அடி பணிந்தனர். ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அவ்வாறு செய்யவில்லை.

பா.ஜனதாவின் பயம்

இதேபோல ஆபரேஷன் தாமரை திட்டம் பீகார் மற்றும் தெலுங்கானாவிலும் எடுபடவில்லை. தற்போது பா.ஜனதா பெற்றுள்ள பெரும்பான்மை என்பது தூய்மைற்ற கொள்கையால் பெறப்பட்டது.

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை பற்றிய கவலையில் பா.ஜனதா உள்ளது. சரத்பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் உள்ளிட்ட போட்டி தலைவர்களை கண்டு பயப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநில அரசுகளை கவிழ்க்க நடக்கும் முயற்சியை ஆபரேஷன் தாமரை என எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன.

--------------


Next Story