பெரிய தொழில் திட்டங்கள் மராட்டியத்தை விட்டு செல்லவில்லை; வெள்ளை அறிக்கையில் தகவல்


பெரிய தொழில் திட்டங்கள் மராட்டியத்தை விட்டு செல்லவில்லை; வெள்ளை அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2023 7:15 PM GMT (Updated: 4 Aug 2023 7:15 PM GMT)

பெரிய தொழில் திட்டங்கள் மராட்டியத்தை விட்டு சென்றுவிட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மும்பை,

பெரிய தொழில் திட்டங்கள் மராட்டியத்தை விட்டு சென்றுவிட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் பல்வேறு பெரிய தொழில் முதலீடு திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டது. அதை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. குறிப்பாக டாடா- ஏர்பஸ் விமான தயாரிப்பு, வேதாந்தா- பாக்ஸ்கான் செமி கன்டக்டர் திட்டம் போன்றவை பக்கத்து மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து மேல்-சபையில் தொழில்துறை மந்திரி உதய் சமந்த் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதவாது:-

புரிந்துணர்வு மேற்கொள்ளப்படவில்லை...

டாடா ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவன திட்டம் தொடர்பாக மாநில அல்லது மத்திய அரசு- டாடா நிறுவனத்திற்கும் இடையே எந்த கையெழுத்தும் மேற்கொள்ளப்படவில்லை. டாடா ஏர்பஸ் திட்டத்திற்கு நிலம் வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. வேதாந்தா- பாக்ஸ்கான் செமி கன்டக்டர் திட்டம் குறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசின் உயர் அதிகாரிகள் குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இருப்பினும் இந்த கூட்டத்தில் தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெறவில்லை. வேதாந்தா- பாக்ஸ்கான் திட்டத்தில் மராட்டிய தொழில் வளர்ச்சி கழகத்துடன் அல்லது அரசுடன் எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படாத நிலையில், நிறுவனம் மராட்டியத்தை விட்டு வெளியேறியது என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.

5 சதவீத வட்டி மானியம்

மராட்டிய அரசு நடுத்தர மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 சதவீத வட்டி மானிய திட்டத்தையும், முத்திரை பதிவு கட்டணங்களில் 100 சதவீத விலக்கையும் அளித்துள்ளது. முதலீட்டுக்கு எதிரான ஜி.எஸ்.டி.யை திருப்பி வழங்குதல், சிறு, குறு தொழில்களுக்கு 100 சதவீத மொத்த ஜி.எஸ்.டி.யை திருப்பி செலுத்துதல் போன்ற சலுகைகளையும் வழங்கியது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story