நடுவானில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


நடுவானில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 30 Sept 2023 1:15 AM IST (Updated: 30 Sept 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இருந்து வாரணாசிக்கு சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது

மும்பை,

ஆகாசா ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று காலை மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தின் வாரணாசிக்கு புறப்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்துக்கு சமூக வலைத்தளம் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வாரணாசியில் விமானம் இறங்கியதும் விமானத்தில் இருந்த 166 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அங்குலம் அங்குலமாக விமானம் சோதனையிடப்பட்டது. ஆனால் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எந்த பொருளும் விமானத்தில் கிடைக்கவில்லை. அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story