உல்லாஸ்நகரில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி


உல்லாஸ்நகரில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
x

உல்லாஸ்நகரில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் பரிதாபமாக பலியானான்.

தானே,

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் கேம்ப் 4-ம் பகுதியை சேர்ந்த சிறுவன் வினோத் பரிகார்(வயது8). இவன் சம்பவத்தன்று நில சிறுவர்களுடன் அங்குள்ள நீர்நிலையில் நீச்சல் அடிக்க சென்றான். நீச்சல் அடித்து கொண்டிருந்த சிறுவன் வினோத் பரிகார் அங்கிருந்த மின்கம்பத்தை தொட்டு உள்ளான். அப்போது கம்பத்தில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் சிறுவன் வினோத் பரிகாரை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மின்இணைப்பை துண்டித்து மீட்டனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து வித்தல்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story