ஜனாதிபதி தேர்தலில் வரிசையில் நிற்காமல் நேராக சென்று வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.- செல்லாத ஓட்டு என அறிவிக்க பா.ஜனதா வலியுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலில் வரிசையில் நிற்காமல் நேராக சென்று வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.- செல்லாத ஓட்டு என அறிவிக்க பா.ஜனதா வலியுறுத்தல்
x

ஜனாதிபதி தேர்தலில் வரிசை நிற்காமல் வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஓட்டை செல்லாது என அறிவிக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

ஜனாதிபதி தேர்தலில் வரிசை நிற்காமல் வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஓட்டை செல்லாது என அறிவிக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.

வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது. மராட்டியத்தில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட வசதியாக மந்திராலயாவில் உள்ள சென்ட்ரல் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மின்சார துறை மந்திரியுமான நிதின் ராவத் வரிசை நிற்காமல் ஓட்டுப்போட்டதற்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.

செல்லாத ஓட்டாக அறிவிக்க வேண்டும்

இதுகுறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. பாபன்ராவ் லோனிக்கர் கூறுகையில், " நிதின் ராவத் ஓட்டுப்பதிவு தொடங்கும் முன்பே சென்ட்ரல் ஹாலுக்கு வந்தார். அவர் எங்களை போல வரிசையில் நிற்காமல், நேரடியாக உள்ளே சென்று ஓட்டுப்போட்டார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவரது ஓட்டை செல்லாத ஓட்டாக அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத உள்ளேன்" என்றார்.

Next Story