அமலாக்கத்துறை கட்டுப்பாட்டை எங்களுக்கு கொடுத்தால் தேவேந்திர பட்னாவிஸ் கூட சிவசேனாவுக்கு வாக்களிப்பார் -சஞ்சய் ராவத் கூறுகிறார்


அமலாக்கத்துறை கட்டுப்பாட்டை எங்களுக்கு கொடுத்தால் தேவேந்திர பட்னாவிஸ் கூட சிவசேனாவுக்கு வாக்களிப்பார் -சஞ்சய் ராவத் கூறுகிறார்
x

அமலாக்கத்துறை கட்டுப்பாட்டை எங்களிடம் கொடுத்தால் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூட சிவசேனாவுக்கு வாக்களிப்பார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

அமலாக்கத்துறை கட்டுப்பாட்டை எங்களிடம் கொடுத்தால் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூட சிவசேனாவுக்கு வாக்களிப்பார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு

மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. 6 இடங்களுக்கு 7 பேர் தேர்தல் களத்தில் இறங்கியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடும் போட்டிக்கு இடையே சிவசேனா சார்பில் நிறுத்தப்படட சஞ்சய் பவார் தோல்வி அடைந்தார்.

அதேசமயம் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட தனஞ்செய் முகாதிக் இந்த தேர்தலில் வெற்றி பெற்றார்.

இந்தநிலையில் மாநிலங்களவை தேர்தலில் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க சுயேட்சை மற்றும் சிறிய கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக மத்திய விசாரணை அமைப்புகளை பா.ஜனதா பயன்படுத்துவதாக தேர்தல் நடப்பதற்கு முன்பு சிவசேனா செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.

இந்தநிலையில் பா.ஜனதாவின் மாநிலங்களவை தேர்தல் வெற்றி குறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

உத்தவ் தாக்கரே வருத்தம்

அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டை 2 நாட்களுக்கு எங்களிடம் கொடுத்தால் எதிர்க்கட்சி தலைவரான தேவேந்திர பட்னாவிஸ் கூட சிவசேனாவுக்கு வாக்களிப்பார்.

சில குதிரைகள் அதிக விலைக்கு விற்பனையாகிவிட்டன. எங்கள் வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தும் கடைசி நிமிடத்தில் எதிர்பக்கமாக தாவிவிட்டன.

எங்கள் கருத்துகள் மூலம் நாங்கள் எங்கள் உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்துகிறோம். சிவசேனாவுக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கும், பா.ஜனதாவுக்கு நாங்கள் என்ன சொல்கிறோம் என்பது தெரியும்.

இந்த பிரச்சினையின் வளர்ச்சியை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். சஞ்சய் பவாரின் தோல்வி குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வருத்தத்தில் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story