அகோலாவில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் பலி- சிறுவனை தேடும் பணி தீவிரம்


அகோலாவில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் பலி- சிறுவனை தேடும் பணி தீவிரம்
x

அகோலா மாவட்டத்தில் அகோலாவில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முதியவர் பலி- சிறுவனை தேடும் பணி தீவிரம்

அகோலா,

அகோலா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அங்குள்ள ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தநிலையில் தண்டுல்வாடி அருகே உள்ள மெகாலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து மேம்பாலம் மூழ்கிய நிலையில் வெள்ளம் சென்றது. அப்போது அங்கு 62 வயது முதியவர் தனது 11 வயது பேரனுடன் மேம்பாலம் வழியாக கடக்க முயன்றார். இதில் சிறுவன் வெள்ளநீரில் நிலை கொள்ள முடியாமல் அடித்து செல்லப்பட்டான்.

தனது கண்முன்பே பேரன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை கண்ட முதியவர் உடனே காப்பாற்ற முயன்றார். ஆனால் முதியவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கினார். இதனை கண்ட கிராமத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தீயணைப்பு படையினர் நடத்திய தீவிர வேட்டையில் முதியவரின் உடல் மீட்கப்பட்டது. ஆனால் வெள்ளத்தில் மூழ்கிய சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. முதியவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர் முதியவர் பிரபாகர் (வயது 62) எனவும், மாயமான அவரது பேரன் ஆதித்யா (11) என்பதும் தெரியவந்தது.


Related Tags :
Next Story