பணவீக்கம், வேலையின்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப ஞானவாபி மசூதி சர்ச்சை- சரத்பவார் குற்றச்சாட்டு


பணவீக்கம், வேலையின்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப ஞானவாபி மசூதி சர்ச்சை- சரத்பவார் குற்றச்சாட்டு
x

பணவீக்கம், வேலையின்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப ஞானவாபி மசூதி சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளதாக சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

புனே,

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, ஞானவாபி மசூதி சர்ச்சையை வேண்டுமென்றே கிளப்புகிறார்கள் என்று சரத்பவார் குற்றம்சாட்டினார்.

ஞானவாபி மசூதி சர்ச்சை

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததாகவும், இந்து கோவிலான இதை மசூதியாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் சர்ச்சை எழுந்து உள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை புனேயில் பிரமாண அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர். பின்னர் அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, ஞானவாபி பிரச்சினை குறித்து எழுப்பிய கேள்விக்கு சரத்பவார் பதிலளித்து கூறியதாவது:-

வேண்டுமென்றே...

நாட்டில் பணவீக்கம், வேலையின்மை பிரச்சினை நிலவுகிறது. இதில் இருந்து நாட்டு மக்களை திசை திருப்பவே ஞானமசூதி சர்ச்சை கிளப்பப்படுகிறது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளை மூடி மறைக்க வேண்டும் என்றே ஆளும் கட்சியினர் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். மேலும் மதங்களுக்கு இடையே அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டுமென்றே இந்த சதி செயலில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

-----


Next Story