விவாகரத்தான பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி


விவாகரத்தான பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி
x

வெளிநாட்டு மாப்பிள்ளை ஆசைகாட்டி விவாகரத்தான பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

அம்பர்நாத்,

வெளிநாட்டு மாப்பிள்ளை ஆசைகாட்டி விவாகரத்தான பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

இங்கிலாந்து மாப்பிள்ளை

தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 42 வயது விவாகரத்தான பெண் ஒருவர் திருமணம் செய்ய இணையதளம் மூலம் வரன்தேடி வந்தார். இதில் அவருக்கு இங்கிலாந்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு ஒருவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் ஆன்லைன் மூலம் பேசிவந்தனர். நாளடைவில் விவாகரத்தான பெண்ணுக்கு, அந்த நபருடன் நெருக்கம் ஏற்பட்டது.

சமீபத்தில் அவர் பெண்ணை பார்க்க இந்தியா வருவதாக கூறினார்.

ரூ.3 லட்சம்

இந்தநிலையில் திடீரென அந்த பெண்ணுக்கு சுங்க அதிகாரி எனக்கூறிக்கொண்ட ஒருவரின் போன் அழைப்பு வந்தது. அதில் உங்களை பார்க்க வந்தவரிடம் விலைமதிப்பு மிக்க அன்பளிப்புகள், 10 லட்சம் பவுண்ட் வெளிநாட்டு பணம் இருப்பதாகவும் கூறினார். இதற்காக சுங்கதுறைக்கு வரி செலுத்த வேண்டும், அல்லது 8 ஆண்டுகள் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் என்றார்.

இதை உண்மையென நம்பிய விவாகரத்தான பெண் நகையை அடகு வைத்து ரூ.3 லட்சத்தை செலுத்தினார். பின்னர் அவர் மோசடி கும்பலால் ஏமாற்றப்படுவதை உணர்ந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவாகரத்தான பெண் மான்பாடா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு மாப்பிள்ளை ஆசைகாட்டி விவாகரத்தான பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.


Next Story