சமூக வலைத்தளத்தில் போலீஸ் அதிகாரிகள் பெயரில் தொடரும் மோசடிகள்


சமூக வலைத்தளத்தில் போலீஸ் அதிகாரிகள் பெயரில் தொடரும் மோசடிகள்
x

சமூக வலைத்தளத்தில் போலீஸ் அதிகாரிகள் பெயரில் மர்ம ஆசாமிகள் தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மும்பை,

சமூக வலைத்தளத்தில் போலீஸ் அதிகாரிகள் பெயரில் மர்ம ஆசாமிகள் தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மோசடி குறுந்தகவல்

மும்பையில் சமீபத்தில் போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கரின் முகப்பு படத்தை (டி.பி.) கொண்ட வாட்ஸ்அப் எண்ணில், பொதுமக்களுக்கு குறுந்தகவல் ஒன்று வந்து கொண்டு இருக்கிறது.

அந்த குறுந்தகவலில், "எனது ஏ.டி.எம். கார்டு தற்போது என்னிடம் இல்லை. எனவே எனக்கு சில அமேசானில் கிடைக்கும் கிப்ட் கார்டுகளை உடனடியாக வாங்கி அனுப்புங்கள். இன்றைக்குள் நான் உங்களுக்கு அதை திருப்பி தருகிறேன்" என கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவல் வேகமாக பரவி குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்தனர்.

இது மோசடி முயற்சி என பொதுமக்களுக்கு அறிவுருத்தினர்.

இணை கமிஷனர் பெயரில்...

இந்த நிலையில் போலீஸ் இணை கமிஷனர் பிரவின் பத்வாலின் புகைப்படத்தை பயன்படுத்தி இதேபோன்ற மோசடி முயற்சி நடந்துள்ளது. இது குறித்து இணை கமிஷனர் பிரவின் பத்வால் வெளியிட்ட தகவலில் கூறியதாவது:-

எனது பெயரில் போலியான வாட்ஸ்அப் எண்ணை உருவாக்கி, அதில் பணம் அல்லது கிப்ட் கார்டுகளை வழங்குமாறு மோசடி ஆசாமிகள் கேட்கின்றனர். இதுபோன்ற கோரிக்கைகளுக்கு தயவு செய்து பதில் அளிக்க வேண்டாம். அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டு வாட்ஸ் அப் மூலம் போலீசில் புகார் அளியுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுதல் டி.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து கொண்ட அதிகாரிகளை குறிவைத்து இந்த மோசடி கும்பல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story