மனைவியை பயமுறுத்த தூக்கில் தொங்க முயன்ற கணவர் பலி


மனைவியை பயமுறுத்த  தூக்கில் தொங்க முயன்ற கணவர் பலி
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரூ.500 பிரச்சினையில் மனைவியை பயமுறுத்த தூக்கில் தொங்க முயன்ற கணவர் பலியானார்.

வசாய்,

ரூ.500 பிரச்சினையில் மனைவியை பயமுறுத்த தூக்கில் தொங்க முயன்ற கணவர் பலியானார்.

வாக்குவாதம்

பால்கர் மாவட்டம் விரார் மேற்கு வீர்சாவர்க்கர் மார்க் லஷ்மி நிவாஸ் என்ற கட்டித்தில் வசித்து வந்தவர் ராம்ஜி சர்மா (வயது36). இவரது மனைவி சாந்தினிதேவி (26). ராம்ஜி சர்மா பயந்தரில் உள்ள துணி ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மனைவி சாந்தினி தேவியிடம் புதிதாக துணி வாங்க ரூ.2 ஆயிரம் கொடுத்து இருந்தார்.

பின்னர் ரூ.500-ஐ தனக்கு திருப்பி தருமாறும் சில நாட்கள் கழித்து தருவதாக சாந்தினி தேவியிடம் தெரிவித்தார். ஆனால் சாந்தினி தேவி பணம் தர மறுப்பு தெரிவித்தார். இதனால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தூக்கில் தொங்கினார்

ரூ.500-ஐ திருப்பி தராவிட்டல் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியை பயமுறுத்தி உள்ளார். ஆனால் மனைவி இதனை கண்டு கொள்ளாமல் இருந்தார். படுக்கை அறைக்கு சென்ற ராம்ஜி சர்மா சேலையால் தூக்கு போடுவது போல நாடகமாடியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கால் விலகியதால் தவறுதலாக சேலை கழுத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் தூக்கில் தொங்கி மூச்சுத்திணறி மயங்கினார்.

இதையறிந்த மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து மீட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story