நர்சுகள் போராட்டம் எதிரொலி- அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நோயாளிகள் பாதிப்பு


நர்சுகள் போராட்டம் எதிரொலி- அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நோயாளிகள் பாதிப்பு
x

நர்சுகள் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

நர்சுகள் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

வேலை நிறுத்தம்

அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை பணியில் அமர்ந்த மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள 1500 அரசு மருந்துவமனைகளில் உள்ள நர்சுகள் 5-வது நாளாக நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளியில் இருந்து நர்சுகளை பணியில் அமர்த்துவதால் தங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஊதிய உயர்வு கிடைக்காமல் போய்விடும். சம்பளம் பெருமளவு குறைந்துவிடும். இதனால் வருமானத்திற்காக வேறு வழிகளை நாடவேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே அரசு தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தி நர்சுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அறுவை சிகிச்சைகள் பாதிப்பு

நர்சுகளில் இந்த தொடர் போராட்டம் காரணமாக மருத்துவ சிகிச்சை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சைகள் எண்ணிக்கை 3-ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது.

இதுகுறித்து ஜே.ஜே. ஆஸ்பத்திரி டீன் பல்லவி சாப்லே கூறியதாவது:-

ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் ஒரு நாளைக்கு சராசரியாக 65 முதல் 70 அறுவை சிகிச்சைகள் நடத்த திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் நர்சுகள் பற்றாக்குறையால் இன்று 22 அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடத்த முடிந்தது. நோயாளிகளுக்கு அசவுகரிநர்சுகள் போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.யம் ஏற்படுவதை தடுக்க நர்சிங் மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story