பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா கணபதி மண்டல் ரூ.26.50 கோடிக்கு காப்பீடு


பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா கணபதி மண்டல் ரூ.26.50 கோடிக்கு காப்பீடு
x
தினத்தந்தி 10 Sep 2023 7:30 PM GMT (Updated: 10 Sep 2023 7:30 PM GMT)

மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா கணபதி மண்டலல் ரூ.26 கோடியே 50 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா கணபதி மண்டலல் ரூ.26 கோடியே 50 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 19-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியின் போது பல்வேறு இடங்களில் மண்டல்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பூஜைக்கு பிறகு சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதில் பிரசித்தி பெற்ற லால்பாக்ராஜா, கணேஷ் கல்லி, சிந்தாமணி கணபதி, வடலா ஜி.எஸ்.பி. மண்டல்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

லால்பாக் ராஜா

ஆண்டுதோறும் பெரிய மண்டல்கள், தங்கள் மண்டல்களை காப்பீடு செய்வது வழக்கம். நடப்பாண்டு நகரின் பணக்கார விநாயகராக கருதப்படும் வடலா ஜி.எஸ்.பி. மண்டல் ரூ.360 கோடிக்கு காப்பீடு செய்துள்ளது. இந்தநிலையில் லால்பாக் ராஜா மண்டல் ரூ.26 கோடியே 50 லட்சத்திற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விநாயகருக்கு அணிவிக்கப்படும் நகைகளுக்கு மட்டும் ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து லால்பாக் ராஜா மண்டலின் பொருளாளர் மங்கேஷ் தல்வி கூறியதாவது:- முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த காப்பீட்டில் லால்பாக் ராஜா மண்டல்களில் பணிபுரியும் காவலாளிகள், ஊழியர்கள், அமைப்பாளர்கள், பக்தர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கும், லால்பாக் கணபதி சிலைக்கு அணிவிக்கப்படும் நகைளுக்கு ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கும், எலக்ட்ரானிக், உபகரண பொருட்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கும், மண்டலில் பிரசாதத்திற்காக ரூ.5 கோடிக்கும், விபத்து நடந்தால் ரூ.5 கோடி அளவிற்கும் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story