ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் - சபாநாயகர் தகவல்

ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் - சபாநாயகர் தகவல்
x
தினத்தந்தி 7 July 2023 7:45 PM GMT (Updated: 7 July 2023 7:45 PM GMT)

ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் என சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியுள்ளார்.

மும்பை,

ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த விசாரணை விரைவில் தொடங்கும் என சபாநாயகர் ராகுல் நர்வேகர் கூறியுள்ளார்.

16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்

ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்-மந்திரி ஆனார். ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு தகுதி நீக்கம் குறித்து சட்டசபை சபாநாயகர் முடிவு எடுக்க உத்தரவிட்டது. சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு வலியுறுத்தி வருகிறது. மேலும் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் முறையிட்டு உள்ளது.

விரைவில் விசாரணை

இந்தநிலையில் நேற்று இதுகுறித்து சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் கூறியதாவது:- தேர்தல் ஆணையத்திடம் இருந்து சிவசேனாவின் கட்சி விதிகள் தொடர்பான ஆவணம் கடந்த வாரம் தான் எனது அலுவலகத்துக்கு வந்தது. விரைவில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த விசாரணையை தொடங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story