பெஸ்ட் பஸ் பயணிகள் எண்ணிக்கை 35 லட்சமாக அதிகரிப்பு


பெஸ்ட் பஸ் பயணிகள் எண்ணிக்கை 35 லட்சமாக அதிகரிப்பு
x

மும்பையில் பெஸ்ட் பஸ் பயணிகளின் எண்ணிக்கை 35 லட்சமாக அதிகரித்து உள்ளது.

மும்பை, செப்.19-

மும்பையில் பெஸ்ட் பஸ் பயணிகளின் எண்ணிக்கை 35 லட்சமாக அதிகரித்து உள்ளது.

35 லட்சம் பயணிகள்

மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெஸ்ட் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வந்தது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ.5 ஆக குறைத்தது. மேலும் ரூ.6-க்கு ஏ.சி. பஸ் சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் காரணமாக பெஸ்ட் பஸ் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக பயணிகள் எண்ணிக்கை மீண்டும் குறைந்தது. இந்தநிலையில் தற்போது பெஸ்ட் பயணிகள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதில் தற்போது தினந்தோறும் மும்பையில் பெஸ்ட் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 35 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 2 லட்சம் பயணிகள் அதிகரித்து உள்ளனர்.

காரணம் என்ன?

இதுகுறித்து பெஸ்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரூ.5-க்கு சாதாரண பஸ்களிலும், ரூ.6-க்கு ஏ.சி. பஸ்சிலும் பயணம் செய்ய முடிவதால் பயணிகள் அதிகளவில் பெஸ்ட் பஸ்சை தேர்வு செய்கின்றனர்.

இதேபோல ரெயில் நிலையங்கள், அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் ஷேர் ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்களுக்கு பதிலாக பெஸ்ட் பஸ்சில் அதிகம் பயணம் செய்கின்றனர்" என்றார்.


Next Story