ஓடும் ரெயிலில் பெண் வக்கீல் மானபங்கம்; தப்பி சென்ற ஆசாமியை பிடிக்க போலீசார் தீவிரம்


ஓடும் ரெயிலில் பெண் வக்கீல் மானபங்கம்; தப்பி சென்ற ஆசாமியை பிடிக்க போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 25 Sep 2022 12:00 AM GMT (Updated: 25 Sep 2022 12:00 AM GMT)

மும்பையை சேர்ந்த 25 வயது பெண் வக்கீல் மானபங்கம் செய்துவிட்டு தப்பி சென்ற ஆசாமியை பிடிக்க போலீசார் தீவிரம்

மும்பை,

மும்பையை சேர்ந்த 25 வயது பெண் வக்கீல் ஒருவர் சம்பவத்தன்று ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் பயணம் செய்தார். முதல்வகுப்பு பெட்டியில் தனியாக இருந்த நிலையில் ஒருவர் திடீரென அவரது பெட்டியில் ஏறினார். தனியாக இருந்த பெண் வக்கீலை பாலியல் ரீதியாக துன்புறுத்தி விட்டு தப்பி சென்றார். பாதிக்கப்பட்ட அவர் அந்தேரி ரெயில் நிலையம் வந்த போது ரெயில்வே போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால் அவரது புகாரை ஏற்காமல் சுமார் 4 மணி நேரம் காக்க வைத்தனர். தனது நிலைமையை டுவிட்டர் மூலம் பதிவு செய்தார். இந்த பதிவு சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியதால் தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர் அந்தேரி ரெயில் நிலைய போலீசாரை தொடர்பு கொண்டு பெண் வக்கீல் வழங்கிய புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி போரிவிலி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் வக்கீலை மானபங்கம் செய்த வாலிபரை பிடிக்க கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு நடத்தினர். இதைத்தவிர 4 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.


Next Story