முல்லுண்ட்டில் திருடன் என நினைத்து வாலிபர் அடித்து கொலை


முல்லுண்ட்டில் திருடன் என நினைத்து வாலிபர் அடித்து கொலை
x

முல்லுண்டில் திருடன் என கருதி வாலிபரை அடித்து கொன்ற ஒப்பந்த தொழிலாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

முல்லுண்டில் திருடன் என கருதி வாலிபரை அடித்து கொன்ற ஒப்பந்த தொழிலாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அடித்து கொலை

மும்பை முல்லுண்ட் அமர்நகர் பைப்லைன் பகுதியில் நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருட முயன்றதாக தெரிகிறது. இதனை கண்ட அங்கிருந்த ஒருவர் வாலிபரை பிடித்தார். திருடன் என கருதி அவர் உள்பட 4 பேர் சேர்ந்து மூங்கில் கம்பால் வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் வாலிபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

4 பேர் கைது

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற பலியான வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் பலியானவர் ரபீக் சேக் (வயது28) என்பது தெரியவந்தது.

இவரை தாக்கி கொன்ற 4 பேரான சுனில் குமார், கபில் சர்மா, சந்தோஷ் குமார் மற்றும் புலோ சகானி ஆகியோர் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளிகள் என தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story