மராட்டிய- கர்நாடக எல்லைப் பிரச்சினையில் மத்திய உள்துறை தலையிட வேண்டும்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்


மராட்டிய- கர்நாடக எல்லைப் பிரச்சினையில் மத்திய உள்துறை தலையிட வேண்டும்- தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Dec 2022 6:45 PM GMT (Updated: 7 Dec 2022 6:47 PM GMT)

மராட்டிய- கர்நாடக எல்லைப் பிரச்சினையில் மத்திய உள்துறை தலையிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

மராட்டிய- கர்நாடக எல்லைப் பிரச்சினையில் மத்திய உள்துறை தலையிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

எல்லைப் பிரச்சினை

மராட்டியம்- கர்நாடக எல்லையில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மராத்தி பேசும் மக்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எல்லைப் பிரச்சினை மீண்டும் முற்றி இரு மாநிலங்களிலும் தகராறு நிலவி வருகிறது.

இது தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே எழுப்பினார். பூஜ்ஜிய நேரத்தில் பேசிய அவர், "இரு மாநிலங்களிலும் பா.ஜனதா ஆளும் கட்சியாக இருக்கும்போதிலும், மராட்டிய மக்கள் ஒவ்வொரு நாளும் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக மராட்டியத்தை உடைக்க சதி நடைபெற்று வருகிறது.

அமித்ஷா தலையிட வேண்டும்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிலையில் சுப்ரியா சுலே எம்.பி.யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதா எம்.பி.க்கள், இந்த விவகாரம் கோர்ட்டு விசாரணையில் இருப்பதாக தெரிவித்தனர்.

இதேபோல நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, இது ஒரு உணர்வுபூர்வமான, இரு மாநிலங்களுக்கு இடையேயான விவகாரம் என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


Next Story