முககவசம் கட்டாயமில்லை, ஆனால் மக்கள் அணிய வேண்டும்- மந்திரி ராஜேஷ் தோபே வலியுறுத்தல்


முககவசம் கட்டாயமில்லை, ஆனால் மக்கள் அணிய வேண்டும்- மந்திரி ராஜேஷ் தோபே வலியுறுத்தல்
x

முககவசம் கட்டாயமில்லை, இருப்பினும் மக்கள் அணியவேண்டும் என்று மந்திரி ராஜேஷ் தோபே வலியுறுத்தி உள்ளார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

முககவசம் கட்டாயமில்லை, இருப்பினும் மக்கள் அணியவேண்டும் என்று மந்திரி ராஜேஷ் தோபே வலியுறுத்தி உள்ளார்.

அதிகரிக்கும் பாதிப்பு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா அதிகரித்து வருவது குறித்து மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முககவசம் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவது குறித்து அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் முககவசம் அணியுமாறு மக்களை வலியுறுத்துகிறோம்.

நோய்வாய் படுவதற்கு பதிலாக மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். முக கவசத்தை அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

முன் எச்சரிக்கை

இதேபோல சிறிய அளவில் கொரோனா அறிகுறி ஏற்பட்டாலும் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும் ஆண்டுதோறும் நடக்கும் பண்டர்பூர் திருவிழா குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கொரோனா தொற்று அதிகரித்த போதிலும் இந்த திருவிழாவுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சி தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையுடன் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story