‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு


‘அபிநந்தனை பாகிஸ்தான் விடாமல் இருந்து இருந்தால்...’ பதட்டம் தொடர்பாக பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 21 April 2019 9:55 AM GMT (Updated: 21 April 2019 9:55 AM GMT)

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடவில்லை என்றால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என பாகிஸ்தானை எச்சரித்தேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் படைக்கும் மோதல் நேரிட்டது. அப்போது இந்திய விமானப்படையின் விமானம் ஒன்று பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கியது. அதிலிருந்த விமானி விங் கமாண்டர் பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். பின்னர் சர்வதேச நாடுகளின் கண்டனம், நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் அவரை விரைந்து வெளியிட்டது. அப்போது இருநாடுகள் இடையே கடுமையான பதட்டம் காணப்பட்டது.

இந்நிலையில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விடவில்லை என்றால் கடுமையான விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என பாகிஸ்தானை எச்சரித்தேன் என பிரதமர் மோடி குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கூறியுள்ளார்.

இந்திய விமானியை பாகிஸ்தான் கைது செய்ததும், என்னிடம் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பின. நாங்கள் செய்தியாளர்களை சந்தித்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையை விடுத்தோம். இந்திய விமானிக்கு ஏதாவது நடந்து இருந்தால், என்னுடைய பதிலைப் எப்படியிருந்து இருக்கும் என உலக நாடுகளிடம் பேசிக்கொண்டிருந்து இருப்பீர்கள். இரண்டாவது நாளே மோடி 12 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருந்தார், தாக்குதல் நடந்தால் நிலைமை மோசமாகும் என அமெரிக்க அதிகாரி கூறியிருந்தார். 

உடனடியாக பாகிஸ்தானே, இந்திய விமானியை விடுவிப்பதாக அறிவித்தது என கூறியுள்ளார் பிரதமர் மோடி.
 

Next Story