சிறப்புக் கட்டுரைகள்

காதுகளை கவனியுங்க.. கவனமாக பேசுங்க.. + "||" + Listen to the ears .. Speak carefully ..

காதுகளை கவனியுங்க.. கவனமாக பேசுங்க..

காதுகளை கவனியுங்க.. கவனமாக பேசுங்க..
குழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை இப்போது செல்போனுடன்தான் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், விளையும் கெடுதல்களே பலவிதங்களில் விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளன.
அதிக அளவில் செல்போனை பயன் படுத்துகிறவர்களின் உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்படுகிறது. அதுபற்றி பல்வேறு விதமான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இது தொடர்பான முக்கியமான ஆய்வு ஒன்றில், செல்போனை அதிகம் பயன்படுத்துகிறவர்களின் காதுகேட்கும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. ஆய்வில் ஈடுபட்ட காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர் களின் காதுகேட்கும் திறனை ஆய்வுசெய்தனர். ஆய்வுக் குட்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களில் பெண்களும் அடக்கம்.

ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 52 சதவீதத்தினர் செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. செல்போனில் பேசுபவர்கள் மட்டுமின்றி, அதை பயன் படுத்தி காது கருவிகளை மாட்டிக்கொண்டு அதிக நேரம் பாட்டுகேட்பவர்களுக்கும் காதுகேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வருடக்கணக்கில் செல்போனை பயன்படுத்தியவர்கள். வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப்பட்டிருக்கவும் செய்கிறார்கள் என்று அந்த டாக்டர்கள் கூறுகிறார்கள்.

ஆய்வுக்கு உள்ளானவர்களில் 51 சதவீதத்தினர் இடது காதில்வைத்து செல்போனை பயன் படுத்துகிறவர்கள். 40 சதவீதத்தினர் வலது காதில்வைத்து பேசியவர்கள். மீதி 9 சதவீதத் தினர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள்.

இவர்களில் பெரும்பகுதியினர் காது வலியாலும், காது அடைப்பினாலும், காது சரியாகக் கேட்காமலும் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களில் சிலர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. போலி உதிரிபாகங்கள் விற்பனை: செல்போன் கடை விற்பனையாளர் கைது
புதுவையில் செல்போன் போலி உதிரிபாகங்களை விற்பனை செய்ததாக விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.
2. ராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல்: பண பரிமாற்றம், செல்போன் உரையாடல் பற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
ராமேசுவரம் கோவிலில் ரூ.78 லட்சம் கையாடல் தொடர்பாக பணபரிமாற்றம், செல்போன் உரையாடல் பற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஈரோட்டில் சிறுமி பாலியல் பலாத்காரம்: செல்போன் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது
ஈரோட்டில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்போன் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. வேலூர் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன், பேட்டரி கைப்பற்றப்பட்டது
வேலூர் ஜெயிலில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பேட்டரி கைப்பற்றப்பட்டது.
5. செல்போன் திருடிய வாலிபர் கைது பெண்களின் எண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியபோது சிக்கினார்
செல்போன் திருடிய வாலிபர் அதில் உள்ள பெண்களின் எண்களை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியபோது சிக்கினார்.