காட்டெருமை கூட்டத்தை கண்டு மிரண்டு மரத்தின் மீது ஏறிய சிங்கம்! வைரல் வீடியோ!!


காட்டெருமை கூட்டத்தை கண்டு மிரண்டு மரத்தின் மீது ஏறிய சிங்கம்! வைரல் வீடியோ!!
x
தினத்தந்தி 15 March 2022 3:59 PM IST (Updated: 15 March 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

புதுடெல்லி,

காட்டு ராஜாவாக கருதப்படும் சிங்கம் ஒன்று,  கூட்டமாக சென்று கொண்டிருந்த காட்டெருமைகளை கண்டு அஞ்சி, அருகிலிருந்த மரத்தின் மீது ஏறி பத்திரமாக இருந்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

‘வைல்ட் அனிமல் ஷார்ட்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

சிங்கத்தின் கர்ஜனை வீரத்தின் அடையாளமாக காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், சிங்கத்தின் இந்த செயல் பார்வையாளர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

1 More update

Next Story