காகித வரலாறு


காகித வரலாறு
x
தினத்தந்தி 7 Jun 2021 5:17 PM GMT (Updated: 7 Jun 2021 5:17 PM GMT)

சில முக்கிய பயன்பாடுகளுக்கு இன்று வரை காகித பயன்பாடு தவிர்க்க முடியாததாக விளங்குகிறது.

கணினிமயமாக்கலை ஊக்குவித்து வரும் இந்த நவீன காலத்தில் காகிதத்தின் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டது என்றே கூறலாம். ஆனாலும் சில முக்கிய பயன்பாடுகளுக்கு இன்று வரை காகித பயன்பாடு தவிர்க்க முடியாததாக விளங்குகிறது. காகிதம் என்பது எழுதுவற்கு மற்றும் அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் மெல்லிய பொருள் ஆகும். மரம், புல் உள்ளிட்டவற்றில் இருந்து காகிதம் தயாரிக் கப்படுகிறது. காகிதத்தை முதன் முதலில் சீனாவில் சாய்லுன் என்பவர் உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

தற்போது வரை காகித உற்பத்தியில் முதலிடம் வகிப்பது சீனாதான். 2-வது இடத்தில் அமெ ரிக்கா உள்ளது. கி.மு. 2-ம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப் பட்டு வந்ததாக தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் பட்டு ஏற்று மதிக்கு பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில், அதற்கு மாற்றாக காகிதத்தை கருதி உள்ளனர். சீனாவில் இருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு பிறகு மற்ற நாடுகளுக்கு காகித முறை பரவியது.

முதன் முதலாக தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் ஐரோப்பாவில் தான் கட்டப்பட்டது. மரம் போன்ற மூலப் பொருட் களில் இருந்து செல்லுலோஸ் தனியாக பிரித்து எடுக்கப்படு கிறது. பின்னர் கூழாக அரைத்து, ரசாயன பொருட்களை சேர்த்து, திரை வழியாக செலுத்தி அழுத்தி உலர வைத்து காகிதம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் அரேபியர்கள் மூலம் காகிதம் பரவியது. மேலும் 25 சதவீதம் பருத்தி இலைகளால் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த காலத்தில் உருவாக்கப்பட்ட காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. மேலும் அதிக எடை கொண்டதாக இருந்தது. தற்போது நாம் பயன்படுத்தி வரும் நவீன காகிதத்தை நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799-ம் ஆண்டு கண்டுபிடித் தார். இது பெரும்பாலும் மரக் கூழால் தயாரிக்கப்படுகிறது. காகிதம் தயாரிப்பதால் மரங்கள் அழிவதாக புகார் எழுந்தது. இதனால் மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 93 சதவீத காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்படு கின்றன. மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்களால் 17 மரங்கள் காக்கப்படுவதாக கூறப்படு கிறது. காகித பயன்பாடு உதவிகர மாக இருந்தாலும், மறுபுறம் கெடுதல் களையும் தருகி றது. அதாவது காகித நுகர்வு என்பது காடுகள் அழிவுக்கு வழிவகுக்கின்றன. காகித தயாரிப்பு நிறுவனங்கள் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நடுவதாக கூறினாலும், காடுகள் அழிப்புக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Next Story