பெங்களூரு விமான நிலையத்தில் வித்தியாசமான முயற்சி! ஆண்கள் கழிவறையில் நாப்கின் மாற்றும் வசதி அறிமுகம்


பெங்களூரு விமான நிலையத்தில் வித்தியாசமான முயற்சி! ஆண்கள் கழிவறையில் நாப்கின் மாற்றும் வசதி அறிமுகம்
x

பெங்களூரு விமான நிலையத்தில் ஆண்கள் கழிவறையில் குழந்தைகளுக்கான நாப்கின் மாற்றும் அறையை கட்டியதற்காக பலரும் பாராட்டி வருகின்றனர்.

பெங்களூரு,

குழந்தைகளுடன் பயணம் செய்வது என்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக உள்ளது. இதற்கு பெற்றோர் கூடுதல் சாமான்கள், உணவு பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை பேக் செய்ய வேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, பல நகரங்களில் பெற்றோரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் புதுப்புது வசதிகளைத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், பெங்களூரு விமான நிலையத்தில் ஆண்கள் கழிவறையில் குழந்தைகளுக்கான டயப்பர், நாப்கின் மாற்றும் அறையை கட்டியதற்காக விமான நிலைய நிர்வாகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில் நாப்கின் மாற்றும் வசதி அமைந்துள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இத்தகைய முற்போக்கான நடவடிக்கைக்காக விமான நிலைய அதிகாரிகளை பலர் பாராட்டினர். மறுபுறம், இதை கொண்டாடுவதற்கு பதிலாக இயல்பான ஒரு விஷயமாக பார்க்கப்பட வேண்டும் என்று சிலர் சுட்டிக்காட்டினர்.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்த அனுபவங்களையும், இந்த விமான நிலையத்தில் உள்ள வசதிகள் அவர்களுக்கு எவ்வாறு உதவியது என்பதையும் பகிர்ந்து கொண்டனர்.

"பெங்களூரு விமான நிலையத்தில் பாலின பாகுபாடு பாராமல் - குழந்தைகளுக்கான நாப்கின் மாற்றும் நிலையம் இங்குள்ள கழிவறைகளின் ஒரு அம்சமாக உள்ளது. டயப்பர் மாற்றும் நிலையம் நல்ல நிலையில் பொருத்தப்பட்டிருக்கிறது மற்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் தனியாகவும் வசதியாகவும் குழந்தைகளுக்கு நாப்கினை மாற்ற இந்த இடம் உதவுகிறது" என்று விமானநிலைய நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

குழந்தைகளுடன் விமான பயணம் மேற்கொள்ளும் ஆண்களுக்கு கழிவறையில் உள்ள நாப்கின் மாற்றும் பகுதி மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.


Next Story