கரூரில் மீண்டும் 100 டிகிரியை தாண்டி வெயில்


கரூரில் மீண்டும் 100 டிகிரியை தாண்டி வெயில்
x

கரூரில் மீண்டும் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் குளிர்பானங்கள் விற்பனை படுஜோராக இருந்தது.

கரூர்

அக்னி நட்சத்திரம்

கரூரில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வெயில் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்போது 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டியது. பின்னர் சில நாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பின்னர் மீண்டும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவிய தால் பொதுமக்கள் சற்றுநிம்மதி அடைந்தனர். கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும் தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. பின்னர் கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, வாட்டி வந்தது. பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. 106.7 டிகிரி வெயில் வரை கொளுத்தியது. பின்னர் அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததும் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. ஒரு சில நாட்கள் மழையும் பெய்தது.

வாகன ஓட்டிகள் அவதி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 104 டிகிரி வெயில் அடித்தது. இதற்கிடையில் கரூரில் நேற்று 103.1 டிகிரி அளவில் வெயில் கொளுத்தியது. இதனால் வெப்பத்தின் அளவு அதிகரித்து இருந்தது.

சாலைகளில் கானல்நீர் காட்சியளித்தது. வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் சாலைகளில் குடைபிடித்தப்படி சென்றனர். சிலர் தொப்பி அணிந்தும் சென்றனர். அனல் காற்று வீசியதால் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றிக்கொண்டு சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் சாலையோரங்களில் நுங்கு, இளநீர், பழச்சாறு உள்ளிட்ட குளிர்பானங்களின் விற்னை படுஜோராக நடந்ததை காணமுடிந்தது.


Next Story