127-வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை


127-வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
x

காயிதே மில்லத் 127-வது பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்த உள்ளார்.

சென்னை,

கண்ணியத்தென்றல் என்று அழைக்கப்படும் காயிதே மில்லத்தின் 127-வது பிறந்தநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story